Pages

Friday, April 26, 2013

இணைய தளத்தால் இணைந்து இழக்க கூடாததை இழந்த மாணவி?

முகநூலில் முகத்தை காட்டியதன் விளைவு (பேஸ்புக்) காதலால் சிக்கி சீரழிந்த கல்லூரி மாணவி. (பெண்களின் கவனத்திற்கு).

இணையதள காதலால் பல இளம் பெண்கள் சீரழிந்து வருகிறார்கள். பலரது சோகக்கதையை அறிந்த பிறகும் இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வரிசையில் சென்னையில் ஒரு கல்லூரி மாணவி சீரழிந்து கதறிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). எம்.பி.ஏ. படித்து கொண்டு இருக்கும் அவர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தேனாம்பேட்டை பகுதியில் தங்கி இருக்கும் செல்வி அங்குள்ள கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது பேஸ்புக் மூலமாக கோகுலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளரின் நண்பர் ஆவார்.

பேஸ்புக் மூலமாக புராஜக்ட் தொடர்பாக செல்வியும், கோகுலகிருஷ்ணனும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் கோகுலகிருஷ்ணன் மீது செல்விக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் புராஜக்ட்டுக்கு உதவி செய்வதற்காக செல்வியை, கோகுலகிருஷ்ணன் ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ நேராக அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டிடத்தின் அருகே சென்றதும் ஏற்கனவே நின்ற நண்பர்களிடம் செல்வியை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களை அனுப்பி விட்டார்.

செல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் பூட்டி வைத்து கற்பழித்தார். இதற்கு உடந்தையாக கம்யூட்டர் மைய உரிமையாளர் இருந்தார். அப்போது அவர்கள் செல்வியை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளனர். அவர்களின் பிடியில் சிக்கிய செல்வி கதறி உள்ளார். உடனே கோகுலகிருஷ்ணன் எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விடு இல்லை என்றால் எனது நண்பர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த செல்வி கண்ணீருடன் வெளியேறினார். அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஆபாச செல்போன் படத்தை காட்டியே செல்வியை மிரட்டினார்.

சீரழிந்த செல்வி அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது உன்னை திருமணம் செய்கிறேன் என கூறி சமாளித்தார். பின்னர் ஒருநாள் செல்வியும், அவரது உறவினர்களும் கோகுலகிருஷ்ணனை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே ரகசியமாக வேறொரு பெண்ணை கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்த குட்டு உடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி கண்ணீருடன் நடந்த சம்பவத்தை மனுவாக எழுதி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணையதளம் மூலம் ஏமாறும் இளம்பெண்களுக்கு செல்வி சீரழிந்த கதையும் ஒரு சாட்சியாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment